தமிழில் படித்து முதல் முயற்சியிலேயே டி.எஸ்.பி. ஆன பெண் - கி.வீரமணி வாழ்த்து

தமிழில் படித்து டி.எஸ்.பி. ஆன பெண்ணுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-05 08:59 GMT

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-1 தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாப்பட்டியில் - எளிய குடும்பத்தைச் சார்ந்த பவனியா என்ற பெண், தமிழில் படித்து எந்தவித சிறப்பு வகுப்புகளுக்கும் செல்லாமல், தானே வகுப்பறையில் படித்து முன்னேறி, முதல் முயற்சியிலேயே நேரடியாக டி.எஸ்.பி. ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது, அதுதான் சனாதன தர்மம் என்று கல்விக்குத் தடை போட்ட ஒரு சமூகத்தில், இப்படி ஒரு அரிய சாதனை செய்து, அறிவுக் கூர்மையும், அதனை மூலதனமாக்கிய உத்தியோகமும் அடைய எம்மால் முடியும் என்று காட்டிய பவனியாவிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று காட்டிய பவனியாக்களைப் போல, பலரும் கிராமம், தமிழ் வழி படிப்பு எதுவும் உயருவதற்கு எங்களுக்குத் தடையில்லை என்று காட்டியவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்