மதுபோதையில்கையில் பிளேடால் வெட்டிக் கொண்ட தொழிலாளி சாவு

முத்தையாபுரத்தில் மதுபோதையில் கையில் பிளேடால் வெட்டிக் கொண்ட தொழிலாளி இறந்து போனார்.

Update: 2023-05-31 18:45 GMT

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரத்தில் மதுபோதையில் கையில் பிளேடால் வெட்டிக் கொண்ட பூகட்டும் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

பூகட்டும் தொழிலாளி

மேலஆத்தூர் குச்சிக்காடு தெருவை சேர்ந்தவர் அமெச்சியார் (வயது42). இவரது கணவர் ஆவுடையப்பன் (47). பூ கட்டும் தொழிலாளி. அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவியை பிரிந்தார்

தகராறு முற்றியதில் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து முத்தையாபுரம் சுந்தர் நகரில் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும், அவருக்கு மஞ்சள் காமாலை நோயும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

ஆஸ்பத்திரியில் சாவு

திடீரென்று வீட்டில் இருந்த பிளேடால் அவரது இடது கை மணிக்கட்டு அருகில் வெட்டிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்