அளவுக்கு அதிகமாக மது குடித்தவாலிபர் மயங்கி விழுந்து சாவு
அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் மயங்கி விழுந்துஇறந்தாா்.
பெருந்துறை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் வசந்த் (வயது 28). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவா் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு பெருந்துறைக்கு வந்த அவர் அங்கு பஸ் நிலையம் ரோட்டில் உள்ள மதுபான கடைக்கு சென்று உள்ளார். பின்னர் அந்த கடையில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்ததாக தெரிகிறது. இதனால் குடிபோதையில் நடக்க முடியாமல் மதுக்கடைக்கு அருகிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து நேற்று முன்தினம், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வசந்த் இறந்துவிட்டதாக தொிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.