குடிபோதையில் கழுத்தை அறுத்து கொண்ட விற்பனை பிரதிநிதி சாவு
குடிபோதையில் தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்ட விற்பனை பிரதிநிதி பரிதாபமாக இறந்தார்.
கன்னங்குறிச்சி:
விற்பனை பிரதிநிதி
மயிலாடுதுறை தென்கரை ெரயிலடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). தனியார் வீட்டு உபயோக பொருட்கள் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவர் கிச்சிப்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு அடிவாரத்தில் மது போதையில் இருந்த இவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரே சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொண்டார்.
ஆஸ்பத்திரியில் சாவு
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலை இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.