குடிபோதையில் கார் ஓட்டியவர் கைது

குடிபோதையில் கார் ஓட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-20 21:25 GMT

நெல்லை டவுன் அக்கா சாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). இவர் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று காட்சி மண்டபம் அருகில் இருந்த கேபிள் வயர் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்