10 டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளகோவிலில் 10 டன் முருங்கைக்காய் கொள்முதல்

Update: 2023-08-06 13:05 GMT

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி விவசாயிகள் 10 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், சின்னத்தாராபுரம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ மரம் முருங்கை ரூ.10-க்கும், செடி முருங்கை ரூ.12-க்கும், கரும்பு முருங்கை ரூ.15-க்கும் கொள்முதல் செய்தனர் இத்தகவலை முருங்கை வியாபாரி செல்லப்பன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்