முருங்கைக்காய் விலை வரலாறு காணாத உயர்வு

புதுக்கோட்டையில் முருங்கைக்காய் வரலாறு காணாத விலை உயர்வு பெற்றுள்ளது. ஒரு கிலோ ரூ.170-க்கு விற்பனை ஆனது.

Update: 2022-12-14 18:40 GMT

முருங்கைக்காய் விலை உயர்வு

புதுக்கோட்டையில் முருங்கைக்காய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தப்படி உள்ளது. தற்போது பனிப்பொழிவு மற்றும் மழையினால் முருங்கைப்பூ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதனால் முருங்கைக்காய் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக உழவர்சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறி கடைகளுக்கு முருங்கைக்காய் வரத்து பெருமளவு குறைந்தது.

புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு சீசன் காலத்தில் ஒரு நாளைக்கு 500 கிலோ வரை முருங்கைக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் தற்போது 40 முதல் 80 கிலோ வரை முருங்கைக்காய் வரத்து உள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்தப்படி உள்ளது.

ரூ.170-க்கு விற்பனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூ.190-க்கும், நேற்று ரூ.170-க்கும் ஒரு கிலோ முருங்கைக்காய் விற்றது. இதேபோல வெளி மார்க்கெட்டில் ரூ.200 வரைக்கும் விற்றது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகளில் சிலவற்றின் விலைகள் விவரம் வருமாறு:- கத்தரிக்காய் ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், தக்காளி ரூ.26-க்கும், பச்சைமிளகாய் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.20-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், கொத்தவரங்காய் ரூ.25-க்கும், பாகற்காய் ரூ.45-க்கும், கேரட் ரூ.50-க்கும், பீட்ரூட்-ரூ.30-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும் விற்றது.

Tags:    

மேலும் செய்திகள்