கழுத்தை அறுத்து டிரம்ஸ் இசைக்கலைஞர் கொலை

கழுத்தை அறுத்து டிரம்ஸ் இசைக்கலைஞர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு இசைக்கலைஞர் உள்பட 4 பேரை ேபாலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2023-06-21 18:44 GMT


கழுத்தை அறுத்து டிரம்ஸ் இசைக்கலைஞர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு இசைக்கலைஞர் உள்பட 4 பேரை ேபாலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

டிரம்ஸ் இசைக்கலைஞர்

விருதுநகர் பாண்டியன்நகரில், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 40). இவருடைய முதல் கணவர் முத்துராஜ் கடந்த 2012-ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் பாலமுருகன் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவருடைய முதல் கணவர் மூலம் பிறந்த மகன் முத்துப்பாண்டி (17). கூலித்தொழிலாளியான இவர், டிரம்ஸ் இசைக்கலைஞரும் ஆவார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரும் டிரம்ஸ் இசைக்கலைஞர்தான். இவர் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ஸ் அடித்தார். ஆனால், அதற்கான கூலி வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், முத்துப்பாண்டி தலையிட்டதால்தான் அதற்கான கூலி கிடைக்கவில்லை என்று அஜித்குமாருக்கு, முத்துப்பாண்டியுடன் முன்விரோதம் ஏற்பட்டது.

படுகொலை

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அஜித்குமார், செல்வம் என்ற விஜய், தனுஷ் உள்பட 4 பேர் சேர்ந்து, முத்துப்பாண்டியிடம் நைசாக பேசி அவரை வெளியே அழைத்துச் சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் முத்துப்பாண்டி வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், நள்ளிரவில் முத்துப்பாண்டியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். அவருடைய தாயார் ராமலட்சுமியிடம் ஜக்கம்மாள் கோவில் பின்புறம் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாகவும் அது முத்துப்பாண்டியா? என வந்து அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் பதறிய ராமலட்சுமி அங்கு சென்று பார்த்தபோது காயங்களுடன் இறந்து கிடந்தது, தன் மகன் முத்துப்பாண்டிதான் என உறுதி செய்தார்.

4 பேருக்கு வலைவீச்சு

போலீசார் விசாரணையில் அஜித்குமார் உள்ளிட்ட 4 பேரும், முத்துப்பாண்டியை பீர் பாட்டிலால் தாக்கியதுடன், கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்துள்ளனர். முகத்திலும் காயம் ஏற்படுத்தி படுகொலை செய்ததாக தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி, அஜித்குமார், செல்வம், தனுஷ் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்