மேட்டுப்பாளையம்ஜூன் 26 வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள் அதன்படி நேற்று 10 விவசாயிகள் 3 டன் முருங்கைக் காய்களைவிற்பனைக்கு கொண்டு வந்தனர் இதில் முத்தூர் வெள்ளகோவில் காங்கேயம் மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடி முருங்கைக்காய் ரூபாய் 20 க்கும் கரும்பு முருங்கை ரூபாய் 25க்கும் மரம் முருங்கைக்காய் ரூபாய் 15 க்கும் கொள்முதல் செய்தனர்