போதைப் பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

ஜோலார்பேட்டையில் போதைப் பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2023-01-06 17:59 GMT

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் நேற்று பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 58) என்பவரது கடையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் ரவிமா ராஜன் உள்ளிட்ட அலுவலர்களால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்