போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

விளாத்திகுளத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-11 15:04 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது . கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் சாந்தி தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ், தாசில்தார் சசிகுமார்், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். கூட்டத்தில் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மகேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்