போதையற்ற தமிழ்நாடு ஒரு கோடி கையெழுத்து இயக்கம் - போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

போதையற்ற தமிழ்நாடு ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

Update: 2023-02-20 20:50 GMT


மதுரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற தமிழ்நாடு ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் தெற்கு வாசல் மார்க்கெட் பகுதியில் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி தொடங்கியது. போதையற்ற தமிழ்நாடு கையெழுத்து நிகழ்ச்சியினை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தொடங்கி வைத்தார். அரசு கூடுதல் தலைமை வக்கீல் வீரகதிரவன், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் விஜய் அன்பன் கல்லணை மற்றும் விஜய் ரசிகர்கள், மக்கள் நல செயல்பாட்டாளர், ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், உயர்நீதிமன்ற வக்கீல்கள், அரசு டாக்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்