ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய மருந்து விற்பனை பிரதிநிதி கைது
ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.
திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவரது வீட்டு அருகே வசித்து வருபவர் நாராயணசாமி (52). இவர் திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நாராயணசாமி குடித்து விட்டு சாந்தகுமார் விட்டு முன்பு தகராறில் ஈடுபட்டார். இது குறித்து சாந்தகுமார் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நாராயணசாமி கத்தியால் அவரை குத்தினார். இதில் காயம் அடைந்த சாந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை கைது செய்தார்.