குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவா்களுக்கு போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவா்களுக்கு போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடைபெற்றது.;

Update: 2023-06-24 18:45 GMT

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தமிழினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினா். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டி ஏற்பாட்டினை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, நகராட்சி மாதிரி பள்ளி ஆசிரியகள், பொது அமைப்பைச் சார்ந்த விடியல் பிரகாஷ், தீனா, உதவிகர அங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்