போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி;

Update: 2022-11-26 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், சேரம்பாடி போலீசாரும் இணைந்து போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அரசு மேல்நிலை தலைமை ஆசிரியர் சோபனா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காட்டுராஜா, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜித்தா குமார், ஆசிரியர்கள் கிருஸ்ணதாஸ், சுரேஸ், சஜீதா, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பஜார் வரை சென்றது. பின்னர் பள்ளி வளாகத்தில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் போதைபொருட்கள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தடுப்பது குறித்தும் சேரம்பாடி போலீசார் பேசினார்கள். முகாமில் ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்