போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-17 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளியில் காவல்துறை சார்பில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமை தாங்கி பேசும்போது, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். யாராவது போதைப்பொருட்கள் விற்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து போதைப்பொருட்கள் இல்லாத கிராமமாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஸ்குமார், ராஜ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் நாயக்கன்சோலை, பனஞ்சிறாவில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்