போதை மருந்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

போதை மருந்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது

Update: 2022-12-03 18:45 GMT

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மருந்து மொத்த விற்பனையாளர்களின் போதை மருந்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. சங்கத்தலைவர் செய்யது முகமது, செயலாளர் சபா ரத்தினம், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை வடக்கு மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஹபிப் முகமது, மருந்து ஆய்வாளர் அய்யப்பதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

உதவி இயக்குனர் ஹபிப்முகமது பேசுகையில், 'முறையான மருந்து உரிமம் பெற்று வியாபாரம் செய்யாத எந்த வணிகர்களுக்கும், முறையான மருத்துவப்படிப்பு இல்லாத மருத்துவர்களுக்கும் நார்கொடிக் வகை மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. வியாபாரிகள் மருந்துகளை விற்பனை செய்யும்போது அதற்கான கொள்முதல் ஆடர்களை பெற்றுக்கொண்டு விற்பனை செய்ய வேண்டும். விலைப்பட்டியல்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அரசு வழிகாட்டுதலையும் மீறி செயல்படும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஏற்பாடுகளை மாநில பொருளாளர் சண்முகநாதன், வெங்கட்ராமன், அருணாசலம், மகாராஜன், திருமாறன் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்