கவுசிகமா நதியில் கழிவுநீர் கலக்கும் இடங்கள் டிரோன் மூலம் பதிவு

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கவுசிகமா நதியில் கழிவுநீர் கலக்கும் இடங்களை டிரோன் மூலம் பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-18 19:47 GMT


மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கவுசிகமா நதியில் கழிவுநீர் கலக்கும் இடங்களை டிரோன் மூலம் பதிவு செய்யப்பட்டது.

கவுசிகமா நதி

விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் மதுரை ஐகோர்ட்டில் கவுசிகமாநதியில் விருதுநகர் நகராட்சி, சிவஞானபுரம், ரோசல்பட்டி, பாவாலி, கூரைக்குண்டு ஆகிய பஞ்சாயத்துகள் சார்பில் கழிவுநீர் கலப்பதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது விருதுநகர் நகராட்சி சார்பில் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தினசரி 1.5 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

டிரோனில் பதிவு

இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு மனுதாரர் தரப்பிலும், நகராட்சி நிர்வாகத்தின் தரப்பிலும் இது தொடர்பாக கழிவு நீர் கலக்கும் இடங்களை போட்டோ மூலம் பதிவு செய்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இதற்காக வக்கீல் ராஜ் மோகன் தலைமையில் கமிஷன் அமைத்தது. இதையடுத்து வக்கீல் ராஜ்மோகன் தலைமையிலான கமிஷனும் நகராட்சி சார்பில் என்ஜினீயர் மணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கவுசிகமாநதி விருதுநகர் பகுதியில் நுழையும் இடத்திலும், கலைஞர் நகர், அய்யனார் நகர், பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம், சிவகாசி ஆற்றுப்பாலம், பாத்திமா நகர், சாத்தூர் ரோடு பாலம், ஆத்துமேடு வரை டிரோனை பறக்கவிட்டு புகைபடம் மூலம் பதிவு செய்தனர். இந்த பதிவுகள் இன்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்