மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது டிரோன் மோதியது: 2 பெண் என்ஜினீயர்கள் மீது வழக்குப்பதிவு

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது டிரோன் மோதியதில் 2 ெபண் என்ஜினீயர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-24 20:06 GMT


மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது டிரோன் மோதியதில் 2 ெபண் என்ஜினீயர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டிரோன் மோதியது

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவில் கோபுரத்தின் மேற்பரப்பில் டிரோன் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் மேற்கு கோபுரம் எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அங்கிருந்தபடி அவர்கள் வைத்திருந்த டிரோனை இயக்கினர். அந்த டிரோன் எதிர்பாராதவிதமாக மேற்குகோபுரத்தின் மீது மோதி விழுந்தது. அதனை கைப்பற்றி மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் விசாரித்தனர்.

வழக்குப்பதிவு

டிரோனை பறக்க விட்டது மராட்டியத்தை சேர்ந்த சயலி சிங்கர், சுருதி உர்குடே என்பதும், அந்த 2 பெண்களும் என்ஜினீயர்கள் என்றும் தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, பல்வேறு கோவில்களுக்கு சென்று டிரோன் மூலம் படம் எடுத்தோம். ஆனால் இந்த பகுதியில் இயக்கி பார்த்த போது அது தவறி கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களில் டிரோன் மூலம் எதுவும் பதிவு செய்துள்ளார்களா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அவர்கள் கோவிலை எதுவும் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் அனுமதியின்றி டிரோனை பறக்க விட்டதாக 2 பெண் என்ஜினீயர்கள் மீதும் மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்