முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ட்ரோன் கேமராக்கள் பறக்கவும், படம் எடுக்கவும் தடை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ட்ரோன் கேமராக்கள் பறக்கவும், படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-28 14:27 GMT

திருப்பத்தூர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பத்தூர் தொன்போஸ்கோ பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருப்பத்தூர் புதிய மாவட்ட கெலக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் பொது மக்கள் கலந்து கொள்கின்றனர்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பறக்கவும், ட்ரோன் கேமராக்கள் படம் எடுக்கவும் தடைவிதிக்கப்படுகிறது.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்