அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 2.45 மணியளவில் அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தூறல் மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக பூமி குளிர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இதன்காரணமாகபொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.