விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை
தஞ்சை அருகே விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
வல்லம்
தஞ்சை அருகே உள்ள தங்கப்பஉடையான்பட்டியை சேர்ந்தவர் அப்பாசாமி. இவருடைய மகன் வினோத்குமார்(வயது31). கார் டிரைவரான இவர் நேற்று மதியம் களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.