டி.என்.பாளையம் அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; தாய் கைது

டி.என்.பாளையம் அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; தாய் கைது

Update: 2023-08-02 20:59 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கோவிலூர் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). திருமணமான இவர் மனைவி மற்றும் 2 மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ஆம்னி வேனை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருடைய தாய் மாரியம்மாள் (61). இவர் கொங்கர்பாளையம் பகுதியில் தனியாக வசித்து கொண்டு கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி மாலை தாய் மாரியம்மாளை வீட்டுக்கு வந்து விடுமாறு அய்யப்பன் அழைத்து உள்ளார். ஆனால் மாரியம்மாள் மகன் அய்யப்பனுடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள் தனது கையில் வைத்திருந்த கரும்பு வெட்டப் பயன்படுத்தும் கத்தியால் மகன் அய்யப்பனின் வலது பின்னங்காலில் வெட்டியுள்ளார்.

இதில் காயம் அடைந்த அய்யப்பன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து அய்யப்பன் நேற்று பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாளை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்