தூத்துக்குடியில் டிரைவர் கொலை வழக்கில்தேடப்பட்டவர் கைது

தூத்துக்குடியில் டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-18 18:45 GMT

தூத்துக்குடி, தாளமுத்துநகர், ஆ. சண்முகபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கலைச்செல்வன் (வயது 29). இவரது நண்பர் சதீஷ். இவர்கள் அந்த பகுதியில் மது குடித்து கொண்டு இருந்த போது, அங்கு வந்த அவரது நண்பர்கள் டிரைவர் சந்திரசேகர் (40), புரோட்டாக் கடை மாஸ்டர் அப்பு (26) ஆகியோருக்கும் சதீசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், அப்பு ஆகிய 2 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் கலைச்செல்வன், சதீஷ் ஆகியோரை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த கலைச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். தொடர்ந்து அப்புவை தேடி வந்தனர். அவரை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்