வாகனம் மோதி டிரைவர் சாவு

கரிவலம்வந்தநல்லூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-10 18:45 GMT

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் மகன் செல்வம் (வயது 45). டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் திருவேங்கடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார் குலசேகரன்கோட்டை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அடையாளம் தெரியாத வாகனத்தை உடனடியாக கண்டுபிடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வத்திற்கு அன்ன பாக்கியம் என்ற மனைவியும், ஆஷா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்