வாகனம் மோதி டிரைவர் பலி

வாகனம் மோதி டிரைவர் பலியானார்.

Update: 2022-07-08 17:43 GMT

குருபரப்பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்தகூடலூரை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 26). வேன் டிரைவர். இவர் பந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த வாகனம் ஜெயவேல் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜெயவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்