ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி டிரைவர் பலி
ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27). வேன் டிரைவர். இவரது மனைவி கீதா (23). 2 மகள்கள் உள்ளனர். சீனிவாசன் மோட்டார்சைக்கிளில் திருவள்ளூர் புறப்பட்டார். ஊத்துக்கோட்டை நகர எல்லையில் புதிய மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அனந்தேரியில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி நெல் முட்டைகளுடன் வந்து கொண்டிருந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பென்னலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.