லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி

லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.;

Update: 2022-10-13 21:04 GMT

வாழப்பாடி, அக்.14-

வாழப்பாடியில் புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சேலம்-சென்னை புறவழிச்சாலையில் நேற்று அதிகாலையில் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி டாரஸ் லாரி சென்றது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மினி லாரி டாரஸ் லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் மினிலாரியை ஓட்டிச்சென்ற கரூர் அடுத்த வெங்கப்பாளையத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்