லாரி மோதி டிரைவர் பலி

லாரி மோதி டிரைவர் பலியானார்.

Update: 2022-12-20 18:19 GMT

ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47), டிரைவர். இவர் வெட்டன்விடுதியில் இருந்து பாப்பான்விடுதி புதுரோடு பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வேங்கிடகுளம் நந்தவன தெருவை சேர்ந்த குணசேகரனை (52) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்