மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

கழுகுமலையில் மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-15 19:00 GMT

கழுகுமலை:

கழுகுமலையில் மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர்

கழுகுமலை அண்ணா புதுதெருவை சேர்ந்தவர் சிங்கராஜ். (வயது 57). கழுகுமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில் உள்ள மின்மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதனால் சுயநினைவின்றி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கழுகுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், மாரியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி இறந்த சிங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன டிரைவர் சிங்கராஜிக்கு அன்னபாக்கியம் என்ற மனைவியும், ஆனந்த் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்