வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

நித்திரவிளை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-18 18:45 GMT

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டிரைவர் தற்கொலை

நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்தவர் பொன்னையன் (வயது 45). இவருடைய மனைவி லைலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பொன்னையன் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு 6 மாதங்களுக்கு முன்பு வந்தார். இவர் நேற்று மதியம் வரை வீட்டில் இருந்தார். அதன்பிறகு திடீரென வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலை கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. அதைத்தொடர்ந்து உறவினர்கள் பல இடங்களுக்கும் சென்று தேடினார்கள். அப்போது மங்காடு பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் பொன்னையன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்த உறவினர்கள் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொன்னையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொன்னையன் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்