மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் சாவு

பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் சாவு

Update: 2023-03-18 20:03 GMT

பூதப்பாண்டி, 

பூதப்பாண்டி அருகே உள்ள எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 35), தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்நேற்று மாலையில் இவர் நாகர்கோவிலில் இருந்து எட்டாமடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெரிசனங்கோப்பு பழையாற்று பாலம் பகுதியை சென்றடைந்த போது நிலைதடுமாறி சைக்கிளை ஓட்டி சென்ற எட்டாமடை பரதர் தெரு பகுதியை சேர்ந்த அந்தோணி (58) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்தோணி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்