லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு: மின்கம்பி மீது உரசியதால் விபரீதம்
லாரியில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழந்தாா்.
உளுந்தூர்பேட்டை,
சேலம் மாவட்டம் நரஜோதி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ரமேஷ் (வயது 36). இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் லாரி டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று கல்குவாரிக்கு லாரியை ஓட்டி சென்றார். அப்போது, குவாரி பகுதியில் செல்லும் ஒரு மின் கம்பியில் லாரியின் பின்பக்க டிப்பர் உரசியது. இதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து, ரமேசை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.