விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே வண்ணாங்குடிகாடு மேற்கு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் பிரபு (வயது 36). இவருடைய மனைவி ஜானகி. இவர்களுக்கு 1 மகன் உள்ளார். பிரபு, சேத்தியாத்தோப்பில் உள்ள சர்க்கரை ஆலையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பிரபு வீட்டில் இருந்த இன்வெர்ட்டரில் பிளக்கை மாட்ட முயன்றபோது எதிர்பாரத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து, பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.