கார் மீது லாரி மோதியதில் டிரைவர் சாவு

ராணிப்பேட்டையில் கார் மீது லாரி மோதியதில் டிரைவர் இறந்தார்.

Update: 2023-06-08 17:52 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா, குருசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21). இவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள மேம்பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று டயர் வெடித்தது. இதனால் காரை நிறுத்தி டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லாரியில் வந்த கிளீனர், ஆந்திர மாநிலம் மங்கலத்தொட்டி குப்பத்தை சேர்ந்த பிரவீன் குமார் (19) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்