கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு

கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் இறந்தார்.

Update: 2022-11-10 19:07 GMT

ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி எஸ்.மேலப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 52). லாரி டிரைவர். இவர் அப்பகுதியில் உள்ள பொந்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் முளைத்துள்ள ஆல மரக்கன்று மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்