தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பலி

கோவில்பட்டியில் தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பரிதாபமாக பலியானார்.

Update: 2023-01-17 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி இந்திரா நகர் கிழக்கு ஓடைத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார் (வயது 26). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது உறவினருக்குச் சொந்தமான காரை ஓட்டிச் சென்றார். கார் அத்தை கொண்டான் சாலையில் சித்தி விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இடதுபக்க டயர் வெடித்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் கார் கோவில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்