பச்சாம்பாளையம் அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; லாரி டிரைவர் சாவு
பச்சாம்பாளையம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் லாரி டிரைவர் இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;
பள்ளிபாளையம்:
பச்சாம்பாளையம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் லாரி டிரைவர் இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ராசிபுரத்தானூரை சேர்ந்தவர் கோபி (வயது 38). லாரி டிரைவர். இவருடைய மனைவி கலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை கோபி தனது மொபட்டில் சங்ககிரியில் இருந்து சிமெண்டு தொழிற்சாலை வழியாக தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் செல்வம் என்பவர் அமர்ந்திருந்தார்.
விசாரணை
அப்போது பச்சாம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், கோபி மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செல்வம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தோஷ், மெய்யழகன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கோபி மனைவி கலா வெப்படை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோபியின் உடல் சங்ககிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.