ரெயில் மோதி டிரைவர் பலி
அரக்கோணம் அருகே ரெயில் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
அரக்கோணம்
அரக்கோணம் அருகே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 35). டிரைவர்.
இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து சென்ற போது அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் அந்த வழியாக வந்த ரெயில் சீனிவாசன் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.