திருச்செந்தூரில்டிரைவர் தூக்குேபாட்டு தற்கொலை

திருச்செந்தூரில்டிரைவர் தூக்குேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-13 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மேல ரதவீதியை சேர்ந்த முத்தையா மகன் மூர்த்தி (வயது 47). டிரைவர். இவரது மனைவி சியாமளா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சியாமளா தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ராகினி ஸ்பெய்னா என்ற மகள் உள்ளார். மகள் திருமணமாகி பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் கோவில் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று, மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்