டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

பறக்கை அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-05-19 18:43 GMT

மேலகிருஷ்ணன்புதூர்,

பறக்கை அருகே உள்ள தெங்கம்புதூர் பரதர் தெருவை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது57). இவருடைய மனைவி அபூர்வமேரி. வர்க்கீஸ் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வர்க்கீஸ் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி அபூர்வ மேரி கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த வர்க்கீஸ் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் பறக்கை குளத்தின் தென்கரை பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் வர்க்கீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வர்க்கீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்