தனியார் ஷூ நிறுவன பெண்களை தகாத வார்த்தைகளால் பேசிய டிரைவர் கைது
தனியார் ஷூ நிறுவன பெண்களை தகாத வார்த்தைகளால் பேசிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கர்
தனியார் ஷூ நிறுவன பெண்களை தகாத வார்த்தைகளால் பேசிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கரை அடுத்த ஐப்பேடு கீழ்மோட்டூரை சேர்ந்த 20 பெண்கள் வாலாஜா அருகில் உள்ள ஒரு தனியார் ஷூ நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தினமும் அந்த நிறுவனத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் ஒரு வேனில் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
அவர்களை அதே ஊரைச் சேர்ந்தவரும் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை இயக்கும் டிரைவரான ராஜ்குமார் (வயது 38) என்பவர், நீங்கள் இந்த ஊரில் இருந்து அந்த வேனில் சென்று வேலை செய்யக்கூடாது எனக்கூறி, அந்த பெண்களை தகாத வார்த்ைதகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த 20 பெண்களும் சோளிங்கர் போலீசில் ராஜ்குமார் மீது புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.