முறப்பநாடு அருகே எம்.சாண்ட் மணல் கடத்திய டிரைவர் கைது

முறப்பநாடு அருகே எம்.சாண்ட் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-08 11:52 GMT

ஸ்ரீவைகுண்டம்:

முறப்பநாடு பகுதியில் உரிய அனுமதியின்றி லாரியில் எம்.சாண்ட் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 யூனிட் எம் சாண்ட் மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

எம்.சாண்ட் மணல் கடத்தல்

முறப்பநாடு பகுதியில் எம்.சாண்ட் மணல் லாரிகளில் கடத்தி செல்வதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தது.

இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் முறப்பநாடு அருகே உள்ள வசவப்பபுரம்- அனவரதநல்லூர் சாலையில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த லாரியில் எந்தவித அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

உடனடியாக அந்த லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் முறப்பநாடு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

டிரைவர் கைது

மேலும் இதுகுறித்து தாசில்தார் அளித்த புகாரின்பேரில் முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுநரான நெல்லை மாவட்டம் அவனாபேரி பகுதியை சேர்ந்த மலையப்பன் மகன் பரமசிவன் (வயது 36), என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து டிப்பர் லாரியையும், 4 யூனிட் எம்.சாண்ட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்