10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது

மயிலாடுதுறை அருேக 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-31 18:45 GMT

மயிலாடுதுறை அருேக 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

10-ம் வகுப்பு மாணவி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மேலக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகண்டன் (வயது 22). டேங்கர் லாரி டிரைவரான இவர் 15 வயதான 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அப்போது சிறுமியுடன் பாலகண்டன் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமடைந்தாள்.

இந்தநிலையில் சிறுமியின் உடலில் மாற்றத்தை கண்டறிந்த அவளது பெற்றோர் சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றனர்.

கைது

சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவள் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பாலகண்டன் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்