நாளை முதல் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
நாளை முதல் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் ரோடு நீர்உந்து நிலையத்தில் இருந்து நகரில் அமைந்து உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. இதில் மகாலிங்கபுரம் நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் பிரதான குழாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) ஆகிய 2 நாட்கள் நீரேற்றம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மேற்கண்ட 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.