குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

Update: 2022-07-24 14:27 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு நீர் உந்து நிலையத்தில் இருந்து நகரில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குழாய்கள் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது. இதில் மகாலிங்கபுரம் மற்றும் சுதர்சன் நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் பிரதான குழாயில் அதிகளவில் குடிநீர் கசிவு ஏற்படுவதால் 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொள்ளாச்சி நகரில் மேற்கண்ட 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்