நாகாடி ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் கண்மாய் தூர்வாரும் பணி மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
நாகாடி ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் கண்மாய் தூர்வாரும் பணியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் நாகாடி ஊராட்சி நாகாடி பெரிய கண்மாய் ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் விக்னேஸ்வரன், உதவி பொறியாளர் அழகுராஜா, ஒப்பந்ததாரர் சேகர் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், நாகாடி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா பவுல்ராஜ், நாகாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.