மனித-வன விலங்குகள் மோதல் தடுப்பு குறித்து கரடி வேடம் அணிந்து விழிப்புணர்வு
மனித-வன விலங்குகள் மோதல் தடுப்பு குறித்து கரடி வேடம் அணிந்து விழிப்புணர்வு
பந்தலூர்
சேரம்பாடி வனத்துறை சார்பில் வனச்சரகர் அய்யன்னார ்தலைமை தாங்கி தெருமுனை பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். சேரம்பாடி, சேரங்கோடு, படச்சேரி, நாயக்கன்சோலை உள்பட பல பகுதிகளில் சென்னை நாடக குழுவினர் கரடிகள் வேடம் அணிந்து மனித-வனவிலங்குகள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வனவர்கள் ஆனந்த், வனகாப்பாளர்கள் குணசேகரன், ஞானமூர்த்தி, நாடக குழுவினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.