திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
நாங்குநேரியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.;
இட்டமொழி:
நாங்குநேரியில் தி.மு.க இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆரோக்கிய எட்வின், ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, செல்வகருணாநிதி, நகர செயலாளர் வானமாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.ஜான் ரபீந்தர் வரவேற்றார். தாயகம் கவி எம்.எல்.ஏ., மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் டான் அசோக் ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துர்காம்பிகா காசிராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்.சுப்பையா, நிர்வாகிகள் ஜார்ஜ் கோசல், பி.சி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன் நன்றி கூறினார்.