திராவிடர் கழக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர் காளிமுத்து, நகர செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.